ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவம் சார்பில் 58 சிறுமிகளுக்கு தற்காப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தற்காத்துக் கொள்ள...
இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள நவ்ஷெரா நகரில் 58 சிறுமிகளுக்கு ராணுவம் நுணுக்கங்களை கற்பித்துள்ளது. இவர்கள் அனைவரும் 11 வயது முதல் 14 வயதுடைய சிறுமிகள். இது அவர்களுக்கு எல்லா நேரத்திலும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இதன்மூலம், வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அச்சிறுமிகளால் முடியும்.
தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களால்...
இந்த 58 சிறுமிகளுக்கு ராணுவத்தின் தகுதிவாய்ந்த பயிற்சியாளர்கள், தற்காப்புக் கலையின் அடிப்படை நுணுக்கங்களையும், ஆயுதமின்றி போர் புரியும் திறன்களையும் கற்றுக் கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.