உலகிலேயே சுகாதாரமின்றி வாழும் நகர்ப்புற மக்களின் பட்டியலில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக, சர்வதேச ஆய்வில் ஒன்றில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனை சேர்ந்த வாட்டர் எய்ட் என்ற தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. சுகாதாரத்திற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வந்தாலும், நகர்ப்புறங்களில் சுகாதாரமின்றி மக்கள் வசித்துவருவதாக, அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய நகர்புறங்களில் பாதுகாப்பான கழிப்பிடங்கள் இல்லை என்றும், சுகாதாரமின்றி சுமார் 16 பேர் வசிப்பதாகவும், திறந்த வெளியில் சுமார் 4 கோடி பேர் கழிப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமின்றி வாழும் நகர்ப்புற மக்களின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் சுகாதார குறைப்பாடு இருப்பது, தொற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கழிப்பிட தினம் நாளை கடைப்பிடிக்கப்படும் நிலையில், இந்த ஆய்வறிக்கையை பிரிட்டன் தனியார் அமைப்பு வெளியிட்டுள்ளது.
சுகாதாரத்தை முன்னிறுத்தி, சுவச் பாரத் இயக்கத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ள நிலையில், பொது சுகாதாரத்தில் இந்தியா பின்தங்கியிருப்பது, குறிப்பிடத்தக்கது.
English summary:

In the list of the world's urban population live populated , India is one of the, one of the international study has shown.