சென்னை: கடந்த டிச.,6ம் தேதி அதிகாலை முதல்வர் ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில், மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது, அவரது உடலைச் சுற்றி, சசிகலா குடும்பத்தினர் தான் இருந்தனர். நல்லடக்கத்திற்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டது வரை, இதே நிலை தான்.
5 ஆண்டுகளுக்கு முன்:
ஐந்து ஆண்டுகளுக்கு முன், 2011 டிச.,19ம் தேதி சசிலகா குடும்பத்தினரை கூண்டோடு கட்சியை விட்டு நீக்கிய ஜெயலலிதாவின் துணிச்சலை, அப்போது பலரும் பாராட்டினர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்:
ஜெ., வெளியிட்ட அறிக்கை:
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்கி, 2011 டிச.,19ம் தேதி அப்போதைய முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
அ.தி.மு.க., தலைமைச் செயற்குழு உறுப்பினர், வி.கே.சசிகலா, ம.நடராஜன், திவாகர், டி.டி.வி.தினகரன், வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், ராவணன், மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி.மகாதேவன், தங்கமணி ஆகியோர், இன்று முதல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட, அனைத்து பொறுப்புகளில்இருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அப்போது அரசு நிர்வாகத்திலும், கட்சி நிர்வாகத்திலும் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து தலையிட்டு வந்தனர். இதன் மூலம், அரசுக்கும், கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வந்தனர். இதையடுத்தே, இந்த அதிரடி நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா எடுத்து இருந்தார்.
பன்னீர்செல்வம் கதை:
கடந்த, 2011ல் அ.தி.மு.க., அரசு பதவியேற்றதும், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கப் பிரிவில், சிறப்பு அலுவலர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்ட, ஏ.பன்னீர்செல்வம், அப்பணியிலிருந்து ராஜினாமா செய்தார்; இதிலிருந்து பிரச்னைகள் வெளிப்படத் துவங்கின. பன்னீர்செல்வம், நடராஜனுக்கு மிகவும் நெருக்கமாவனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக ஓய்வு பெற்ற இவர், சிறப்பு அலுவலராகப் பணியில் அமர்த்தப்பட்டார். கோட்டையில், அதிகார மையமாக விளங்கிய இவர், அதிகாரிகள் மாற்றம், அமைச்சர்கள் மாற்றம், அரசு டெண்டர்களை முடிவு செய்தல் என, அனைத்திலும் தலையிட்டு வந்தார் என குற்றச்சாட்டு எழுந்தது.
அமைச்சர்களும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், கோட்டையில் உள்ள இவரது அறைக்கு வந்து, இவரை சந்தித்து விட்டு செல்லும் நிலையில் இவர் இருந்தார். இத்தகவல்கள் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதால், பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.
திருமலைசாமி சிக்கினார்:
இதையடுத்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த திருமலைசாமி மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இது போன்ற நடவடிக்கைகள் நடந்து கொண்டு இருக்கையில், சசிகலா போயஸ் தோட்டத்தில் தங்குவதில்லை என்றும், இளவரசியின் வீட்டில் அவர் தங்குகிறார் என்றும் தகவல்கள் வெளியானது.இதனால், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகமாகி, எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என பரபரப்பாகப் பேசப்பட்டது.
அதன் எதிரொலியாக, சசிகலா, நடராஜன் மற்றும் இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என, 14 பேரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து நீக்கி, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து இருந்தார்.
24 மணி நேர கெடு:
இந்த அறிக்கை வெளியான, 24 மணி நேரத்தில் சசிகலா, நடராஜன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சென்னையிலிருந்து,வெளியேற வேண்டும் என, ஜெயலலிதா உத்தரவிட்டதாகவும்அப்போது கூறப்பட்டது.. மேலும், ராவணன், மோகன் ஆகியோர் வீடுகளில் போலீசார் நடத்திய ரெய்டில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியதாகவும்தகவல் வெளியானது.
ஜெயலலிதாவுக்கு, முதன் முதலில் மனைவி சசிகலாவை அறிமுகம் செய்த நடராஜன், பிற்காலத்தில் பின்புலத்தில்இருந்து சசிகலாவையும், கட்சியையும்இயக்க ஆரம்பித்தார்.
இதனாலேயே, 1992ல், நடராஜனுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என ஜெயலலிதா அறிவித்தார். அப்போதே அவர் கட்சியில் உறுப்பினராக இருந்தாரா இல்லையா, என கட்சியினருக்கே தெளிவாக தெரியவில்லை.
நடராஜன் நீக்கம்:
கடந்த, 1996ல் கருத்து வேற்றுமை ஏற்பட்டபோது, சசிகலாவையும், நடராஜனையும்கட்சியை விட்டு நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். மூன்று மாதங்களில் சசிகலா கட்சியில் சேர்க்கப்பட்டார்.
அப்போதும் நடராஜனின் நிலைமை தெரியவில்லை.பின், சசிகலாவுக்கு தலைமை செயற்குழுஉறுப்பினர் பதவி தரப்பட்டபோது கூட,நடராஜனுக்கு பதவி தரப்படவில்லை. இருப்பினும் அவர்கட்சியில், "நிழல்'மனிதராகவே வலம் வந்தார். சசிகலாவும்நடராஜனும் ரகசியமாக சந்தித்துக்கொள்வதாக அவ்வப்போது தகவல்கள் வந்தன.
கட்சிக்காரர்கள் பலரும் நடராஜனுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்தனர். இந்நிலையில் சசிகலாவின் கூட்டத்துடன்சேர்த்து, நடராஜனும் கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இதில் வினோதம் என்னவென்றால், கட்சியில்இருக்கிறாரா இல்லையா என கட்சியினருக்கு தெரியாமலேயே, அப்போது நடராஜன் நீக்கப்பட்டார்.
சசிகலா அறிக்கை:
2011ல் சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டது, மூன்று மாதங்களுக்கு கூட நீடிக்கவில்லை. 2012 மார்ச், 28 ம் தேதி அவர் மீண்டும் போபஸ் கார்டனுக்குள் நுழைந்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கை:கடந்த, மூன்று மாத காலமாக பத்திரிகைகளில் என்னைப் பற்றிய பலவிதமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. 1984ல், முதன்முறையாக அக்காவை (முதல்வர் ஜெயலலிதா) நான் சந்தித்தேன். அதன் பின், எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. அவரும் என்னை தன் தங்கையாக ஏற்றுக்கொண்டார். 1988 முதல்அக்காவின் போயஸ் கார்டன் இல்லத்திலேயே அவருடன் வசித்து வந்தேன்.
உண்மைகள் தெரிந்தன:
அ.தி.மு.க.,வின் பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வந்த அக்காவின் பணிச்சுமையை ஓரளவுக்காவது குறைக்கும் வகையில் அவருக்கு உதவியாக இருந்து, என்னால் இயன்ற பணிகளை செய்யவேண்டும் என்றுதான் விரும்பினேனே தவிர, வேறு எந்தவிதமான எண்ணங்களும் எனக்கில்லை.போயஸ் கார்டன் இல்லத்தில் அக்காவுடன் இருந்த வரை, வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஓரளவுக்குதான் தெரிந்ததே தவிர, முழு விவரம் தெரியவில்லை. 24 ஆண்டுகள் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நான், கடந்த டிசம்பர் மாதம் அவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியே வந்து வேறு இடத்தில் வசிக்கவேண்டிய சூழ்நிலை உருவான பின்னர்தான் நடந்த உண்மைகள் முழுமையாக எனக்கு தெரியவந்தன.
சதி திட்டங்கள்:
கடந்த டிசம்பர் மாதம் அக்கா மேற்கொண்ட சில ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு பிறகுதான் அதற்கு என்ன காரணம், அதன் பின்னணி என்ன என்பது எல்லாம் எனக்கு தெரியவந்தது. என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன், ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து எனது பெயரை தவறாக பயன்படுத்தி சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும் அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டது என்பதையும், அக்காவுக்கே எதிரான சில சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன். மிகுந்த வேதனை அடைந்தேன். இவை எல்லாம் எனக்கே தெரியாமல் நடந்தவை என்பது தான் உண்மை. அக்காவை சந்தித்த நாள் முதல் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர, கனவிலும் அக்காவுக்கு நான் துரோகம் நினைத்ததில்லை.
பதவி வேண்டாம்:
என் உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். அக்காவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கு வேண்டாதவர்கள் தான். இவ்வாறு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவருக்கு துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்து விட்டேன். அக்காவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் இனிமேல் அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை.என்னைப் பொறுத்தவரை அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ, எம்.எல்.ஏ., - எம்.பி., ஆகவேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்கு துளியும் ஆசையில்லை. பொது வாழ்வில் பங்கு பெறவேண்டும் என்ற விருப்பமும் இல்லை.அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே நான் விரும்புகிறேன். என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவுக்கு அர்ப்பணித்துவிட்டேன். இனியும் எனக்கென வாழாமல், அக்காவுக்காக என்னால் இயன்ற அளவுக்கு பணி செய்து அக்காவுக்கு உதவியாக இருக்கவே நான் விரும்புகிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary:
Chennai: The last Dec., 6th in the morning, Chief Minister Jayalalithaa Body Rajaji Hall, when people kept for homage, around his body, were Sasikala's family. last settlement until his body was taken to the same situation.