சென்னை: வர்தா புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், மீட்பு பணிக்கு கப்பல், விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மற்றும் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவை ஏற்பட்டால் , மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான உணவு,மருந்து பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவும் தயார் நிலையில் உள்ளது. கடற்படைக்கு சொந்தமான விமானமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நீச்சல் வீரர்கள் கொண்ட 30 குழுக்கள், படகுகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ரப்பர் படகுகள், ஹெலிகாப்டர்கள், உதவி பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
Chennai: varta storm to cross the coast and in the day, the rescue ship, ready to be placed in the navy and was announced on behalf of the Federal Government.
English Summary:
Chennai: varta storm to cross the coast and in the day, the rescue ship, ready to be placed in the navy and was announced on behalf of the Federal Government.