ஐ.நா.,: தென் கொரியாவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதை ஐ.நா., பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ஒய்வு பெற உள்ள பான் கி மூன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஐ.நா., பொதுச்செயலாளராக உள்ள பான் கி மூனின் பதவிக்காலம் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, கடைசி முறையாக பத்திரிகையாளர்களை பான் கி மூன் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பொதுச்செயலாளர் பதவி முடிந்த உடன் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன். பின்னர் தென் கொரியா திரும்பி, நாட்டிற்கு எவ்வாறு சேவை செய்வது என்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளேன் என்றார்.
தென் கொரிய அதிபர் தேர்தல் 2017 டிசம்பரில் நடக்க உள்ளது. ஆனால், தற்போது அதிபராக உள்ள பார்க் கியூன் ஹூ மீது முறைகேடு புகார் கூறப்பட்டது. இதனையடுத்து அவரது அதிகாரத்தை பறித்து பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அரசியல் சாசன கோர்ட் தீர்ப்பளித்தால், அவரது பதவி பறிக்கப்படும். தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்கும்.
English Summary:
UN: South Korea is likely to contest the upcoming presidential election in the United Nations, Secretary-General Ban Ki-moon hints at retire from office, said.