சென்னை: ‛வர்தா' புயலை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வர்தா புயல் தொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. அக்கூட்டத்தில் வர்தா புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி பகுதிகளில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர், இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி தரப்பில் கூறியதாவது:
* தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
* 176 நிவாரண முகாம்களில் குடிநீர், கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.
* சுரங்கப்பாதைகளில் தேங்கும் நீரை வெளியேற்ற 622 மோட்டார்கள் தயார்நிலையில் உள்ளது.மேலும்108 படகுகள் தயார் நிலையில் உள்ளது.
* கொசுக்களை கட்டுப்படுத்த 420 அழுத்ததெளிப்பான்கள் தயார் நிலையில் உள்ளது.
* இரவுப்பணியில் மீட்பு பணிகளை மேற்கோள்ள 18 உயர் கோபுர மின் விளக்குகள் தயார் நிலையில் உள்ளது.
* தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
* மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் பொதுமக்கள் செல்லதாவறு அறிவுறுத்தி வருகிறோம்.
* பொதுமக்கள் அவசர உதவிக்காக 044-25619206,25619511,25367823 மற்றும் வாட்ஸ் ஆப் எண்களாக 94454 77207, 94454 77203, 94454 77206, மற்றும் gccdm@chennai corporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
English summary:
Chennai: "varta" in the face of the storm, the Chennai Corporation has been taking various precautionary measures.