சென்னை: தமிழக காங்கிரசின் குடுமிப்பிடி சண்டை உச்சத்தில் இருக்கிறது. இந்நாள் தலைவர் திருநாவுக்கரசரும் முன்னாள் தலைவர் இளங்கோவனும் முட்டல், மோதலில் இருக்கின்றனர். அ.தி.மு.க.,வை வைத்து, இருவரும் சட்டையை பிடித்து அடித்துக் கொள்ளாத குறையாக மோதிக் கொண்டிருக்க, தூரத்தில் இருந்து, இதைப் பார்த்துக் கொண்டிருக்கும், கதர் சட்டைகள், இது காங்கிரசுக்கு விடப்பட்ட சாபமோ என்று நொந்து சொல்கின்றனர்.
அதிமுக சைடு:
தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் அறிவிக்கப்பட்டப் பின், அவர், தி.மு.க., பக்கம் இருந்து விலகி, அ.தி.மு.க., பக்கம் காங்கிரசை கொண்டு செல்கிறார் என்ற புகைச்சல் தமிழக காங்கிரசில் இருக்கிறது. ஜாதி பாசத்தில் இப்படி செய்கிறார் என்று ஒரு தரப்பும்; நட்பு அடிப்படையில் இப்படி செய்கிறார் என்று ஒரு தரப்பு சொல்லிக் கொண்டிருந்தாலும், அது தமிழக காங்கிரசுக்கு நல்லதல்ல என்று, பலரும் சொல்லி வருகின்றனர்.
இதற்கிடையில் ஜெயலலிதா இறந்து போன விவகாரத்தில் மர்மம் இருக்கிறது; வெள்ளை அறிக்கைத் தேவை என்று, பா.ம.க.,வும்; தி.மு.க.,வும் வலியுறுத்த, அ.தி.மு.க., தரப்பு இன்று வரை அமைதியாக உள்ளது. ஆனால், அது தொடர்பாக கருத்து தெரிவித்த திருநாவுக்கரசர், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொல்லி, வெள்ளை அறிக்கை கேட்கின்றனர். வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும், இறந்து போன ஜெயலலிதா எழுந்து வந்துவிடுவாரா என, தி.மு.க., மற்றும் பா.ம.க.,வினரின் வாயை அடைக்க முயன்றார்.
கண்டனம்:
இந்த விவகாரம்தான், தற்போது தமிழக காங்கிரசில் பற்றி எரிகிறது. தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் இளங்கோவன், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். வெள்ளை அறிக்கை கேட்பதால் ஜெயலலிதா, திரும்பி வர மாட்டார் என்று திருநாவுக்கரசர் சொன்னால், ராஜிவ் கொலை விஷயத்தில் மட்டும் கொலையாளிகளை ஏன் தண்டிக்க வேண்டும்? அவர்களை தண்டிப்பதால் மட்டும், ராஜிவ் திரும்பி வந்துவிடப் போகிறாரா? என, கேள்வி எழுப்பியவர், திருநாவுக்கரசர், நான் ஏற்கனவே அ.தி.மு.க.,வில் இருந்தவன்; அதனால், அந்த கட்சியில் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில்தான், வெள்ளை அறிக்கை தொடர்பாக பேசினேன். இதைப் பற்றி கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை என்று, இளங்கோவனுக்கு, தன் அதிருப்தியை பதிவு செய்தார்.
இருந்தாலும் இந்த விஷயத்தை விடாத இளங்கோவன், ஏற்கனவே அ.தி.மு.க.,வில் இருந்த பாசத்துக்காக, ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக வெள்ளை அறிக்கை கொடுப்பதை எதிர்க்கிறார் என்றால், ஏற்கனவே பா.ஜ.,வில் இருந்த பாசத்தில், மோடி அறிவிப்பான பண மதிப்பிழப்பு அறிவிப்பை மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்? மோடியை சந்தித்து, உங்கள் முடிவை வரவேற்கிறேன் என சொல்லியிருக்கலாமே என, காட்டமாக பதிலடி கொடுத்தார் இளங்கோவன். இதன் பின்பும், திருநாவுக்கரசர், அ.தி.மு.க., ஆதரவாளராகவே பேசி வருகிறார்.
இது காங்கிரஸ் வட்டாரங்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயங்கள் அனைத்தும் மத்திய தலைமைக்கு கொண்டு செல்லப்பட, திருநாவுக்கரசரின் வாயை அடக்கிப் பேசுமாறு, உத்தரவு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: திருநாவுக்கரசர் செயல்பாடுகள் அனைத்தையும் ஆதாரங்களுடன் பட்டியலிட்டு, அதை, தமிழக காங்கிரஸ் தலைவர், மேலிடத் தலைவர்கலான முகுல் வாஸ்னிக் மற்றும் சின்னாரெட்டி ஆகியோரிடம், இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள் கொடுத்துள்ளனர். அதையெல்லாம், போட்டுப் பார்க்கும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்ககள், அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். அதனால், விரைவில் தமிழக காங்கிரசில் இருக்கும் கோஷ்டி பூசல் ஒழிந்து, கட்சி சீர் பட வேண்டும். இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
English summary:
Chennai: Tamil Nadu Congress at the height of the fighting. Nowadays, the former head of President tirunavukkarasaar,elagovan buting, are in conflict. Digg, keep, keep hold of the shirt were both less ister who, from a distance, are watching this, kadir shirts, which were left to the Congress say that neurotic words