புதுடெல்லி: கரன்சி தடை, ஹெலிகாப்டர் ஊழல் போன்ற பிரச்னைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை நேற்று காலை தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் அன்புசெழியன், பி.வி.ராஜேஷ்வர ராவ் ஆகியோரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் கரன்சி தடை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ், திரிணாமுல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதற்கு பதிலடியாக ஆளுங்கட்சி எம்.பி.க்கள், செய்தித்தாள்களை தூக்கி காட்டி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சிலர் லஞ்சம் பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுகுறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என கூச்சலிட்டனர். அப்போது, ‘‘உறுப்பினர்கள் யாரும் பேப்பர்களை காட்ட வேண்டாம். பொறுப்புள்ள எம்.பி.க்களாக நடந்து கொள்ளுங்கள்’’ என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் அமளி தொடர்ந்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை: மாநிலங்களவை நேற்று காலை தொடங்கியதும், கரன்சி தடையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. அப்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக செய்தி வெளியாகியுள்ள நாளிதழ்களை காட்டி கோஷம் எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், ‘‘நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் ஆளுங்கட்சி முடக்குவது இந்திய வரலாற்றில் இதுவரை நடக்காத சம்பவம்’’ என குறிப்பிட்டார்.
அப்போது, மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன், ‘‘விவசாயிகள் பிரச்னை குறித்து பேச எதிர்க்கட்சி தலைவர் நோட்டீஸ் கொடுத்துள்ளார். அவருக்கு நான் அனுமதி அளித்துள்ளேன். அவரை பேசவிடுங்கள்’’ என்றார். ஆனால், பா.ஜ எம்.பி.க்கள் அதை கேட்கவில்லை. ஊழல் பிரச்னை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என ஆளுங்கட்சி விரும்புகிறது என நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். இந்த அமளியால் அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின் கூடியபோதும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அதே கோஷங்களை எழுப்பி கேள்வி நேரத்தை நடத்தவிடாமல் செய்தனர். தொடர் அமளியால் மாநிலங்களவையும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர், கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. கூட்டத்தில் முதல் நாள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும், உயர் மதிப்பு ரூபாய் தடை விவகாரத்தால் நாள் முழுவதும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டு, எந்தப்பணியும் நடக்கவில்லை.
கூட்டத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ெசவ்வாய்க்கிழமை வரையில் நாடாளுமன்றத்துக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் புதன்கிழமை முதல் மீண்டும் அவை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளுடன், ஆளுங்கட்சியினரும் நாடாளுமன்றத்தில் கோஷமிட்டு, அவை நடவடிக்கைகளை முடக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடக்கிறது.
English Summary:
New Delhi: currency ban, emphasizing such issues as corruption helicopter ruling party in parliament, opposition members engaged in Sabha, both houses were put on hold throughout the day yesterday.