பெங்களூரு: பெங்களூருவில் வங்கி ஒன்றில் டி.டி., மூலம் நுாதன முறையில் ரூ.70 லட்சம் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தொடரும் மோசடிகள்
கறுப்பு பணத்திற்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், கறுப்பு பணம் வைத்திருப்போர் வெவ்வேறு ஓட்டைகளின் வழியாக மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ. 70 லட்சம் கறுப்பு பணம்
கறுப்பு பண மோசடி தொடர்பாக, வருமான வரித் துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, பெங்களூருவில் வங்கி டி.டி., மூலம் நுாதன முறையில் ரூ.70 லட்சம் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டி.டி.,மோசடி
பெங்களூருவை சேர்ந்தவர் கோபால், இவர் ஓம்கார் பரிமாள் மந்திர் என்னும் ஊதிபத்தி நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். இவருடைய மகன் அஸ்வின் சுங்கு. இருவரும், பெங்களூருவில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் பசவனகுடி கிளையில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து 149 டி.டி.,கள் எடுத்துள்ளனர். பின்னர், அனைத்து டி.டி.க்களையும் கேன்சல் செய்து புதிய ரூபாய் நோட்டுகளாக திரும்ப பெற்றுள்ளனர்.
3 பேர் கைது
மோசடியில் ஈடுபட்ட கோபால், அஸ்வின் சுங்கு மற்றும் வங்கியின் மூத்த மேலாளர் லக்ஷிமி நாராயணன் ஆகிய மூவரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். வங்கி மேலாளர் நாராயணனின் உதவி இல்லாம் இந்த டி.டி., மோசடி நடைபெற வாய்ப்பில்லை என சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேக்கின்றனர். இதுதொடர்பாக, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்.பி.ஐ., புதிய விதிகள்
வங்கியில் டி.டி., வழங்குவதில் ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் குறித்து அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ். சிசோடியா கூறியதாவது:
ஆர்.பி.ஐ., புதிய விதிகளின் படி, வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளரின் வங்கி கணக்கிலிருந்து தான் டி.டி., வழங்க வேண்டும். கவுன்டரில் ரொக்கமாக பணம் கொடுத்தால் டி.டி., வழங்க கூடாது. பெங்களூருவில் நடந்த சம்பவத்தில் ஆர.பி.ஐ.,யின் விதிகள் மீறப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.
English Summary:
Bangalore: Bangalore is one of the bank DD of Rs 70 lakh by the black money change into white money incident came to light.