சென்னை: தி.மு.க., பொதுக்குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில், 20ல் நடைபெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அக்கூட்டத்தில், செயல் தலைவர் பதவியில், ஸ்டாலினை நியமிப்பது குறித்து, முக்கிய முடிவு எடுக்கப்பட இருந்தது. ஆனால், கருணாநிதி சுகவீனம் அடைந்திருப்பதால், அவர் இல்லாமல் பொதுக்குழுவை கூட்டுவதை, பொதுச் செயலர் அன்பழகன் விரும்பவில்லை. எனவே, பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என, அவர் கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: வரும் 20ம் தேதி நடைபெற இருந்த தி.மு.க., பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உள்ளதால் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. பொதுக்குழு கூட்டம் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக்கூறியுள்ளார்.
English Summary:
Chennai: DMK, without specifying the date of the General Meeting has been postponed.