சென்னை : மருத்துவமனையில் கருணாநிதியை சந்திக்கச் சென்ற வைகோ மீது தி.மு.க.வினர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். தி.மு.க.வினரின் இந்த அநாகரீக செயலுக்கு ம.தி.மு.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வைகோவுக்கு எதிர்ப்பு:
தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து உடல்நலம் விசாரிப்பதற்காக மதி.மு.க பொதுசெயலாளர் வைகோ, நேற்று இரவு காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவரது கார் மருத்துவமனை வளாகத்திற்கு நுழைய முற்பட்டதுமே அங்கு திரண்டிருந்த தி.மு.க தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். செருப்புகளையும், கற்களையும் அவரை நோக்கி வீசனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரிக்காமலே சென்றார்:
இதைத்தொடர்ந்து மதி.மு.கவினருக்கும் தி.மு.கவினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்காமலே திரும்பி சென்றார் இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. தி.மு.கவினரின் அநாகரீக செயலை கண்டு அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ம.தி.மு.க. கண்டனம்:
இது குறித்து ம.தி.மு.க துணை பொதுசெயலாளர் மல்லை சத்யா நிருபர்களுக்கு அளித்த பேட்டியொன்றில் இது ஒரு நாகரிகமற்ற செயல். அண்ணா உருவாக்கிய தி.மு.க நாகரிகமற்ற விதத்தில் நடந்து கொண்டது ஏற்றுக் கொள்ள முடியாதது. வன்மையாக கண்டிக்கின்றோம். நடந்துவிட்ட தவறுக்கு காரணம் கற்பிக்கிறார்கள். தூரத்தில் வைகோவின் கார் வரும் பொழுதே வாகனம் மீது கல், கட்டை வீசப்பட்டது. இது மேலிருக்கும் தலைவர்களுக்கு தெரியாமலேயா நடந்திருக்கும்? அவர்கள் கீழே வந்திருந்தால் நிலைமையை கட்டுப்படுத்தியிருக்க முடியும். இவ்வாறு மல்லை சத்யா கூறியுள்ளார்.
English Summary:
Chennai, vaiko went to see the karunanithi in hospital while DMk people thrown stone attack on Vaiko.