புதுடில்லி : டில்லியில் ஓட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.3.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டில்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வருமான வரித்துறையினர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.3.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் பழைய ரூ.500, 1000 நோட்டுக்களாகும். இந்த பணம் அனைத்தும் மும்பையைச் சேர்ந்த ஹவாலா ஏஜன்டுகளுக்கு உரியது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓட்டல் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த பணம், விமான நிலையத்தில் ஸ்கேனிங் இயந்திரத்தால் கண்டுபிடிக்க முடியாத வரையில் 'பேக்' செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோல், பெங்களூருவில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.2.25 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவா தலைநகர் பனாஜியில் நடந்த சோதனையில் புதிய ரூபாய் நோட்டுகள் மதிப்பு ரூ.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
English Summary:
New Delhi: hotel in Delhi at Rs .3.25 crore was seized in the raid.
The hotel in the Karol Bagh area of Delhi Income Tax and Criminal police raided along.