சென்னை - வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், தங்குதடையின்றி குடிநீர் மற்றும் மின்விநியோகம் வழங்கும் வகையில், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகளை, அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்து மென்மேலும் துரிதப்படுத்தி வருகின்றனர். இதனால், புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேகமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.
புயல்தாக்கியது :
சென்னையை கடந்த 12-ம் தேதியன்று வர்தா புயல் கடுமையாக தாக்கியது. சுமார் 190 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக, நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்களும், மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்தன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மின் விநியோகமும் முடங்கியது. இதையடுத்து மீட்புப் பணிகளை தமிழக அரசு துரிதகதியில் முடுக்கிவிட்டுள்ளது.
மரங்களை அகற்றும் பணிகள் :
சாலையோரம் விழுந்துகிடந்த மரங்களை அகற்றும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இடையூரற்ற போக்குவரத்துக்கு உறுதி செய்யப்பட்டது. மாநகராட்சி ஊழியர்களின் துரித செயல்பாட்டால், புயல் தாக்கிய மறுநாளே சென்னையில் போக்குவரத்து சீரடையத் தொடங்கியது. சென்னையில் அனைத்துப் பகுதிகளுக்கும் மின்விநியோகமும் உடனடியாக வழங்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இரவு பகலாக சாலை ஓரங்களிலும், கழிவுநீர் கால்வாய் பகுதிகளிலும் மரக்கழிவுகள் அகற்றப்பட்டு தொற்றுநோய்கள் பரவாத வண்ணம் பிளீச்சிங் பவுடர்கள் தெளிக்கப்பட்டு வருகின்றன.
மின் சீரமைப்பு பணிகள் :
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில், மின்வாரிய அலுவலர்களைக் கொண்டு மாவட்டம் முழுவதும் மின் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக, கரூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 4 ஆயிரம் மின்வாரியப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 144 ஜெ.சி.பி. இயந்திரங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு மின்சார மறுசீரமைப்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனால், ஆவடி, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட நகராட்சிகளில் 90 சதவீதம் மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
கங்கு தடையின்றி குடிநீர் :
மேலும், நூற்றுக்கணக்கான ஜெனரேட்டர்கள் மற்றும் டேங்கர் லாரிகளைக் கொண்டு தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கொசுமருந்து அடிக்கப்பட்டு வருவதுடன், நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. வர்தா புயலினால் பாதிக்கப்பட்ட பழவேற்காடு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் உள்ள மக்களுக்கு, 75 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள், 200 கிலோ பால் பவுடர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இதனிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில், பொன்னேரியில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் . ஆர். காமராஜ், ஜெயக்குமார், கே.பி. அன்பழகன், வெல்லமண்டி நடராஜன், பா. பென்ஜமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், புயலால் சேதமடைந்த மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலை உள்ளிட்டவைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
அமைச்சர்கள் ஆறுதல் :
புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆரம்பாக்கம், பாட்டை குப்பம், நொச்சி குப்பம், சுண்ணாம்பு குளம் உள்ளிட்ட கடலோரப் பகுதி மீனவர்களை, அமைச்சர்கள் ஜெயக்குமார், பா. பென்ஜமின் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் ஆலோசனை வழங்கினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வர்தா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மின்விநியோகத்தை சீரமைக்கும் பணியில் 6 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் லாரிகள் மற்றும் ஜெனரேட்டர் உதவியுடன் தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் செல்லூர் கே. ராஜு :
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் புயல் நிவாரணப் பணிகள் குறித்து, திருப்போரூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் செல்லூர் கே. ராஜு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் ஆறுதல் கூறினார்.
புயலால் பாதிப்புக்கு உள்ளான தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கம், எம்.சி.இ. நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடையற்ற மின்சாரம் கிடைக்கும் வகையில், சேதமடைந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை அமைச்சர் டாக்டர் வி. சரோஜா பார்வையிட்டு துரிதப்படுத்தினார்.
தொடர்ந்து, தாம்பரம், ஆலந்தூர் மற்றும் பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்குதடையின்றி குடிநீர் மற்றும் மின்சார விநியோகம் வழங்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், தாம்பரத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர் கலந்துகொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பேரமநல்லூர் பகுதியில், தமிழக அரசு மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கையினால் தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் வழங்கப்படுகிறது. இதனை அமைச்சர் துரைக்கண்ணு நேரில் பார்வையிட்டார். பின்னர்,காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், மறைமலைநகர், வண்டலூர் மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தமிழக அரசு, புயல்வேகத்தை விட மிக விரைவாக சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளதால், அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
English summary:
Chennai - varta storm victims Chennai, Tiruvallur, Kancheepuram districts, in order to provide uninterrupted water and power supplies, reconstruction and relief efforts have been on a war footing. Tasks, to further accelerate the ministers are doing research in person. Thus, in the areas affected by the storm is fast returning to normalcy.