நொய்டா: வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், நொய்டாவில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் 20 போலி வங்கிக்கணக்குகள் மூலம் கணக்கில் வராத ரூ.60 கோடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரூ.60 கோடி:
ரூபாய் நோட்டு வாபசிற்கான காலக்கெடு முடிவடைய இன்னும் 16 நாட்கள் உள்ள நிலையில், கணக்கில் வராத பணத்தை வெளிக்கொண்டு வர வருமான வரித்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். டில்லி அருகே உள்ள நொய்டாவி்ல் ஆக்சிஸ் வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக இன்று சோதனை நடத்தினர்.
இதில் அந்த வங்கியில் 20 போலி வங்கிக்கணக்குகளில் கணக்கில் வராத ரூ.60 கோடி டிபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரூ.60 கோடி பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த நவம்பர் 25ம் தேதி டில்லியில் உள்ள காஷ்மீரே கேட் பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.3.5 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சாந்தினி சவுக் பகுதியிலும் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கமிஷனுக்கு பணப்பரிமாற்றம்;
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த மற்றொரு சோதனையில் ரூ.35 லட்சம் அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இவர்கள் கமிஷன் அடிப்படையில் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி தருவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான தகவல், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
Noida: Income Tax officials raided. The Axis Bank in Noida with 20 fake bank accounts was Rs 60 crore of unaccounted found