இஸ்தான்புல்: துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே, கால்பந்து மைதானத்தில் நடந்த இரண்டு தற்கொலைப்படை தாக்குதலில் 38 பேர் பலியானார்கள். 166 பேர் காயமடைந்துள்ளனர்.
போலீசாரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 30 போலீசார் உட்பட 38 பேர் பலியானதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மைதானத்தில் போட்டி முடிந்ததும், பார்வையாளர்கள் அனைவரும் வெளியேறி விட்டதால், பொது மக்கள் பலி குறைவாக இருந்தது. குண்டுவெடிப்பை தொடர்ந்து, அந்த பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக குண்டுவெடிப்பை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். மீட்பு படையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குண்டுவெடிப்பு காரணமாக, மைதானம் அருகே இருந்த கட்டடங்களில் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
English Summary
Istanbul: Istanbul, capital of Turkey, near the football stadium in the two suicide attacks killed 38 people. 166 people injured. The police targeted in the attack, including 30 policemen, the Interior Ministry said 38 people died. 13 people have been arrested in connection with the attack.