புதுடெல்லி : முந்தைய ஆட்சியில் சுய நம்பிக்கை இல்லாததால் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்களில் ஊழல் தலைவிரித்தாடியது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் டெல்லி அசோசம் நிகழ்ச்சியில் கூறினார்.
தலைநகர் டெல்லியில் அசோசம் எனப்படும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
பாதுகாப்புத்துறை உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். அயல் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதுடன் தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்வதிலும் முனைப்புடன் உள்ளன.
உள்நாட்டு பாதுகாப்புக்கு சுய நம்பிக்கை அவசியம் . முந்தைய ஆட்சியில் சுய நம்பிக்கை இல்லாததால் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஊழல்கள் ஏற்பட்டன. இந்த துறையில் வெளிப்படைத்தன்மை ஏற்பட தற்போதைய பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பாதுகாப்புத்துறைக்கு அன்னிய நாடுகளை அதிகம் சாராமல் இருப்பது நல்லது. பாதுகாப்பு உற்பத்தித்துறையில் அதிக அளவில் ஊக்கத்தொகை அளிக்க பரிசீலித்து வருகிறோம். நாம் மங்கள்யான் விண்கலத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளோம். அதேப்போன்று, பாதுகாப்புத்துறைக்கு தேவையானவற்றை அயல் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை ஏன் எதிர் பார்க்க வேண்டும்? நாமே அந்த உற்பத்தித்துறையில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
English Summary:
New Delhi: In the previous regime, the lack of self-confidence as rampant corruption in defense deals, Union Home Minister Rajnath Singh said in New Delhi ashokam program.