புதுடில்லி: உலகின் வளிமண்டலத்தில் டிரோபோஸ்பியருக்கு மேலாக அமோனியா வாயு படலம் பரவியிருப்பதை முதன் முதலாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த அம்மோனியா படலம் இந்தியா மற்றும் சீன நாட்டிற்கு மேல் வளிமண்டலத்தில் உலகின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிக அளவு பரவி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய சீன வளிமண்டலத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 12 கி,மீ., மற்றும் 15 கி.மீ., க்கு இடைப்பட்ட உயரத்தில் இந்த வாயு படலம் பரவி உள்ளது
காரணம்:
அம்மோனியா வாயு பரவி இருப்பதற்கு காரணம் இந்த இரு நாடுகளிலும் விவசாயத்திற்கு அதிக அளவில் யூரியா பயன்படுத்தப்பட்டது தான் என்று தெளிவாகி உள்ளது. பயிர்கள் செழித்து வளர யூரியா உரம் மிகவும் அவசியமாக இருப்பதால் இவை இந்த இருநாடுகளிலும் பயன்படுத்தபடுகின்றன.
அமோனியாவால் ஏற்படக்கூடிய மாற்றம்:
வளிமண்டலத்தில் பரவியுள்ள இந்த அமோனியா வாயு பூமியின் தட்பவெப்ப நிலையை மாற்றக் கூடியது என்று அறியப்பட்டுள்ளது. மேகங்களின் தன்மையை இந்த அமோனியா மாற்ற கூடியது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவை வளிமண்டலத்தில் குளிர்ச்சியை அதிகரிக்க செய்து மேகங்களின் உற்பத்திக்கும் உதவியாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அம்மோனியா வாயுவால் அடிவானம் இனி வரும் காலங்களில் சூரியனின் சிவப்பு நிற கதிர்களால் அலங்கரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
English Summary:
NEW DELHI: Over tripoloi ammonia gas in the atmosphere of the world for the first time found evidence of foil spread.
India and China in the atmosphere above the sea level, about 12 km., And 15 km in altitude between the gas layer is spread