புதுடில்லி : டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் எண்ணம் எதுவுமில்லை என்று தொழிலதிபர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
சைரல் மிஸ்திரி நீக்கத்தைத் தொடர்ந்து ரத்தன் டாடா, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய தலைவரை தேர்வுக் குழு முடிவு செய்யும் வரை ரத்தன் டாடா இடைக்கால தலைவராக நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே, டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் பதவியிலிருந்து ரத்தன் டாடா விரைவில் விலக உள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் டாடா டிரஸ்ட்ஸ், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், அதிகார மாற்றம் அடுத்த ஆண்டு நிகழும் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக டாடா சன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ”டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் திட்டம் எதுவும் ரத்தன் டாடாவிடம் இல்லை. டாடா டிரஸ்ட்ஸ் பணிகளில் அவரது முக்கிய பங்களிப்பு எப்போதும்போல் தொடரும். புதிய தலைவர் குறித்து தக்க தருணத்தில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் முடிவெடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary:
NEW DELHI: Tata trusts industrialist Ratan Tata has said that there was no intention to resign from the post of president.