லண்டன்: இந்த வருடத்திற்கான, சர்வதேச ஆசிரியர் விருதுக்கு இந்தியாவை சேர்ந்த இயற்பியல் ஆசிரியை பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த விருது பெறுவோருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும்.
இயற்பியல் ஆசிரியை:
மும்பையில் உள்ள எம்இடி ரிஷிகுல் வித்யாலாயா சர்வதேச பள்ளியில் இயற்பியல் ஆசிரியையான கவிதா சங்வி, இயற்பியல் பாடத்தை கற்பிக்கும் முறைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். புத்தகங்களில் உள்ள பாடத்தை, வாழ்க்கையில் நேரடியாக சந்திக்கும் அனுபவங்களுடன் ஒப்பிட்டு, கவிதா பாடம் கற்பித்து வந்தார்.
ஊக்கமளிக்கிறது:
விருது தொடர்பாக கவிதா கூறுகையில், கடந்த சில நாட்களாக, நான் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது தொடர்பான செய்தியும், டாப் 50 பட்டியலில் எனது பெயர் இருப்பது செய்தியும் வந்து கொண்டுள்ளது. இதனை அறிந்து நான், வானில் நடப்பது போல் உள்ளது. என்னை தொழில் ரீதியாக பலத்தை கூட்ட உதவியவர்களை நான் தற்போது நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன். இந்த விருது என்னை ஊக்கப்படுத்தும். இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என தூண்டுகிறது. மாணவர்கள், என்னுடன் பணிபுரியம் ஆசிரியர்கள் அனைவரையும், பொறுப்பானவர்களாகவும், சமூக வளர்ச்சியில் அக்கறை உடையவர்களாகவும் மாற்றும் பொறுப்பும் கடமையும் எனக்கு வந்துள்ளது என தெரிவித்தார்.
துபாயில் அறிவிப்பு:
தொடர்ந்து 3வது வருடமாக வழங்கப்படம், சர்வதேச ஆசிரியர் விருதானது, ஆசிரியர்பணியில் சிறப்பாகவும், தனிச்சிறப்புடன் பணியாற்றி, சமூகத்தில் ஆசிரியருக்கான முக்கியத்துவத்தை அளிக்கும் வகையில் பணிபுரிபவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான விருது, 179 நாடுகளில் இருந்து பரிந்துரைகள் பெறப்பட்ட 20 ஆயிரம் பேரில் நன்கு தேர்வு செய்யப்பட்டு 50 பேர் தேர்வாகியுள்ளனர். தொடர்ந்து வரும் 2017 ம் வருடம் பிப்ரவரி மாதம் 50 பேர் பட்டியலில் இருந்து 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் இருந்து வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். இறுதி 10 பேர் பட்டியலில் இடம்பெறும் அனைவரும், 2017 மார்ச் மாதம் துபாயில் நடக்கும் வருடாந்திர சர்வதேச கல்வி மற்றும் திறன் வளர்ச்சி கூட்டத்திற்கு அழைக்கப்படுவர். அப்போது வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.