புதுடில்லி: டில்லியில் நடந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: இந்தியாவின் பொருளாதாரம் புத்துணர்ச்சி பெற்று வருகிறது. ரூபாய் நோட்டு வாபஸ் என்ற தைரியமான முடிவை எடுக்கும் திறன் இந்தியாவிற்கு உள்ளது. ரூபாய் நோட்டு வாபசால் சில பிரச்னைகள் இருந்தாலும், நல்ல பலன்கள் கிடைக்கும். வாபஸ் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடுவதற்கு நீண்ட நாள் ஆகாது. இதற்கான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது. ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட மாட்டாது. ரூபாய் நோட்டு வாபஸ், அதிக பண மதிப்பு புழக்கத்தில் விடுவதை குறைக்கும். வரி ஏய்ப்பு, கறுப்பு பணம் மற்றும் முறைகேடு ஆகியவை ஒழிக்கப்படும்.
முக்கிய முடிவு:
ஜிஎஸ்டி 10 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில முக்கிய முடிவுள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற அரசியல் சாசன சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பல முடிவுகளை ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்க உள்ளது. அரசியல் சட்டப்படி பார்லிமென்டில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில சட்டசபைகள் தறபோது, இந்த மசோதாவை நிறைவேற்றி வருகின்றன என்றார்.
English Summary:
NEW DELHI: Finance Minister Arun Jaitley said at a meeting in New Delhi, India's economy has been refreshed. India has the ability to take the bold decision to withdraw the bill.