நாக்பூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா சட்டசபைகள் ஒத்திவைக்கப்பட்டன.
மகாராஷ்டிரா:
மகாராஷ்டிரா சட்டசபை துவங்கியதும், முதல்வர் பட்நாவீஸ், காங்., தலைவர் படங்க்ரோ கடம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் மற்றும் கங்கட்ரா தேஷ்முக், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் பட்நாவீஸ் இரங்கல் தெரிவித்து பேசியதாவது: தமிழக அரசியலில் பெரிதும் மதிக்கப்பட்ட தலைவர். மக்கள் மீது நீண்ட அன்பு வைத்திருந்ததால், அவரை அனைவரும் அம்மா என அழைத்தனர். அவர் அனைத்து கட்சிகளுடனும் நல்ல உறவு வைத்திருந்தார் எனக்கூறினார். தொடர்ந்து தலைவர்கள் பேசிய பின்னர், 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திய பின்னர் நாள் முழுவதும் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய பிரதேசம்:
ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், 10 நிமிடங்கள் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகர் சிதாசரன் சர்மா, நிதியமைச்சர் ஜெயந்த் மல்லையா, எதிர்க்கட்சி தலைவர் பால பச்சன் மற்றும் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்து பேசினர். ஜெயலலிதா மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திவிட்டதாக தெரிவித்தனர். 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
English Summary:
Former Tamil Nadu Chief Minister Jayalalithaa on to pay tribute to hide, Madhya Pradesh and Maharashtra assembly deferred