சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.
அதிமுக நிர்வாகிகள்:
மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். இவரை இன்று காங்., துணை தலைவர் ராகுல் சந்தித்தார். இந்நிலையில், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கருணாநிதி நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். இன்று மதியம் 1.15 மணியளவில் அதிமுகவை சேர்ந்த லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.
எதிர்கட்சியினரை ஆளும் அதிமுகவினர் சந்தித்து விசாரித்தது நல்லதொரு அரசியல் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கம்யூ., கட்சியின் நல்லக்கண்ணுவும் இன்று கருணாநிதியின் நலம் விசாரித்தார்.
வீடு திரும்புவார்:
பின்னர் தம்பிதுரை கூறியதாவது: அதிமுக சார்பில் கருணாநிதி உடல் நலம் விசாரிக்க வந்தோம். கனிமொழி, கருணாநிதி மனைவி மற்றும் திமுக நிர்வாகிகளிடம் நலம் விசாரித்தோம். நலமுடன் உள்ளதாக அவர்கள் கூறினர். இது மகிழ்ச்சியான செய்தி. விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என வாழ்த்து தெரிவித்தோம். கருணாநிதி விரைவில் வீடு திரும்புவார் என்றார்.
English Summary:
Chennai: DMK president M. Karunanidhi, who is receiving treatment in a hospital in Chennai Kaveri Digg, met senior executives questioned health.