சென்னை: அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்தம் :
சென்னையில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய வர்தா புயல் மேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலு இழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதியில் தற்போது நிலைகொண்டு உள்ளது. இந்நிலையில், வங்க கடலில் மியான்மர் நாட்டின் தெனசெரிம் கடற்கரை மற்றும் தெற்கு அந்தமானையொட்டிய கடல் பகுதியில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருக்கிறது.
தமிழகம் திரும்ப வாய்ப்பில்லை :
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், கரையை கடந்த வர்தா புயல் வலு இழந்து லட்சத்தீவு மற்றும் அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ( டிசம்பர் 17) ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். இதற்கிடையே, வங்க கடலில் தெற்கு அந்தமானையொட்டிய பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இது மிக மிக தொடக்க நிலைதான். இப்போது உள்ள நிலையை வைத்து அது எந்த திசையை நோக்கி நகரும் என்று கூற இயலாது. மேலும் அரபிக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளனர்.
English Summary:
Chennai: Andaman new low pressure area along the Sea to be formed in one of the lower zone of Chennai Meteorological Center said.