புதுடில்லி: பார்லிமென்ட்டில் தொடர் அமளி காரணமாக அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்படுவது, எம்.பி., பதவியை ராஜினாமா செய்தது போல் உணர்வதாக பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
அமளி:
ரூபாய் நோட்டு வாபஸ் பிரச்னையால் பார்லிமென்டில் தொடர் அமளி ஏற்பட்டு வருகிறது. இதனால் பார்லிமென்ட் தினமும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்த முறை இது வரை எந்த நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை. பார்லிமென்ட் கூட்டத்தொடர் நாளை முடிவடைய உள்ளது. இன்றும் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக பார்லிமென்டின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
வேதனை:
அப்போது அங்கிருந்த எம்.பி.,க்களிடம் பேசிய அத்வானி கூறியதாவது: பார்லி கூட்டம் விவாதம் நடத்தாமல் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்படுவது, எம்.பி., பதவியை ராஜினாமா செய்தது போல் உணர்கிறேன். நாளைய கூட்டத்தை இடையூறு இல்லாமல் நடத்துவதை உறுதிப்படுத்த சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அவரிடம் வலியுறத்த வேண்டும். ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும். இது எதுவும் நடக்காமல், எந்த விவாதமும் இல்லாமல் பார்லிமென்ட் ஒத்திவைக்கப்பட்டால், இதனை வாஷ் அவுட்டாக கருத வேண்டும். சுமூக விவாதம் நடத்த, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எந்த விதியின் கீழ் நாளை விவாதம் நடந்தாலும் அதற்கு எந்த தரப்பும், கட்சியும் அதனை வெற்றி தோல்வியாக கருதக்கூடாது. எந்த விவாதம் இல்லாமல், பார்லிமென்ட் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டால், அது பார்லிமென்ட் தோற்கடிப்பதாக கருத வேண்டும். வாஜ்பாய் இன்று அவையில் இருந்திருந்தாலும், இடையூறால் அவை ஒத்திவைக்கப்படுவது வேதனை ஏற்படுத்துகிறது என கூறியிருப்பார் என்றார்.
சில நாட்களுக்கு முன்னர், பார்லிமென்ட் விவாதம் இல்லாமல் ஒத்திவைக்கப்படுவதற்கு அத்வானி வருத்தம் தெரிவித்திருந்தார்.
English Summary:
NEW DELHI: Parliament uproar in the series have been postponed due to the succession, MP, felt resigned senior BJP leader LK Advani said.