சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு நாராயணசாமி, சித்தராமையா உள்ளிட்ட மாநிலத் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, முன்னாள் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் ஜெயலலிதா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதா மறைவு குறித்து தகவல் அறிந்து சென்னை வந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் சென்னை வந்து ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், புது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கோல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி, சென்னை வர இயலாத சூழ்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சென்னைக்கு அனுப்பியுள்ளார்.
English Summary:
Chennai: The body of the late Chief Minister Jayalalithaa Narayanaswamy, paid tribute to the leaders of the state, including Siddaramaiah.