புதுடெல்லி, பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் நிதியமைச்ச
ர் ப.சிதம்பரம் கடுமையாக எதிர்க்க துவங்கியுள்ளனர்.
நாட்டில் உள்ள கறுப்புபணம், வரி ஏய்ப்பு, ஊழல், தீவிரவாதத்திற்கு நிதி செல்லுதல் ஆகியவற்றை முற்றிலும் ஒடுக்க பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதியன்று பழைய ரூ500,ரூ1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்..
அவரது அறிவிப்பை தொடர்ந்து நாட்டில் உள்ள மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ500, ரூ1000நோட்டுகளை வங்கிகளில் மாற்ற வங்கி கிளைகளில் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். அரசின் இந்த அறிவிப்பால் சாதாரண ,ஏழை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் எனவே பழைய ரூ500 , ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற முடிவை திரும்பப்பெற வேண்டும் என காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய எதிர் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. இந்த நிலையில் ரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் ஆகியோர் பா.ஜ.க அரசை கடுமையாக எதிர்க்க தொடங்கியுள்ளனர்.
பழைய ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் மோடி அறிவிப்பதற்கு முன்னர் தங்களது கட்சியினை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்காவிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். இப்படி செய்திருந்தால் மிகப்பெரும் நிர்வாக சீர்கேட்டை தவிர்த்து இருக்கலாம் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், பா.ஜ.,க தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி அரசு ஏழை மக்களின் பணத்தை தடுத்து சில தொழிலதிபர்கள் பலன் அடைய வழி வழிவகுத்துள்ளது. ஏழைகள் தங்களது பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர். இந்த பணத்தில் ரூ8லட்சம் கோடியை தொழிலதிபர்களின் கடன்களுக்காக திருப்பி செலுத்தப்படுகிறது என்றார்.
English Summary:
New Delhi, Old Rs 500, Rs 1000 notes, the Fed's decision was invalid, Congress vice-president Rahul Gandhi, former Finance Minister P. Chidambaram started strongly oppose.