மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.
இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் எடுத்துச் செல்லப்பட்டது. ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் மற்றும் மருமகன் தனுஷ், மகள்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சசிகலாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் ரஜினி.
English summary:
The body of the late Chief Minister Jayalalithaa to actor Rajinikanth, Latha Rajinikanth and Dhanush and others paid tribute in person.