சென்னை: சென்னையில், 'வர்தா' புயலை எதிர்கொள்ள, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளதாக, மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
மாநகராட்சி செய்தி குறிப்பு விபரம்:
வங்க கடலில், 'வர்தா' புயல் மையம் கொண்டிருப்பதால், இன்று, சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புயலை எதிர்கொள்ளும் வகையில், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.சென்னையில் உள்ள, 22 சுரங்கப்பாதைகளில் தேங்கும் வெள்ளத்தை, உடனுக்குடன் வெளியேற்ற, மின்மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன.
ஒவ்வொரு மண்டலத்திலும், ஒரு குழு வீதம், மீட்பு பணியில் ஈடுபடுவர். இரவு நேரத்தில், மீட்பு பணி செய்ய, 18 உயர்கோபுர மின்விளக்குகள் உள்ளன. மீட்பு பணிக்கு, 108 மோட்டார் பொருத்திய படகுகளுடன், 176 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. 45 மர அறுவை இயந்திரங்களுடன், 3,337 மலேரியா ஊழியர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த, 80 பேர் தயார் நிலையில் உள்ளனர்.
எச்சரிக்கை:
கடல் சீற்றம் அதிகமாக வாய்ப்புள்ளதால், கடற்கரையில் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள், மேடான பகுதிக்கு செல்ல வேண்டும். மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில், மக்கள் வேடிக்கை பார்க்க தடைவிதிக்கப்பட்டு உள்ளன. மின்சாரம் தடைப்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மெழுகுவர்த்தி வாங்கி வைத்து கொள்ளவும். மாநகராட்சியில் உள்ள, கட்டுப்பாட்டு அறை, 24 மணி நேரம் இயங்கும். புகார்களை, 044 - 2561 9206 எண்ணில் தொடர்பு கொண்டும், 94454 77207 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணிலும் தெரிவிக்கலாம்.புயலை எதிர்கொள்ள, மாநகராட்சி தயாராக உள்ளதால், யாரும் அச்சமோ, பயப்படவோ தேவையில்லை.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary:
Chennai, "varta" in the face of the storm, all precautions have been taken, the corporation said.