மாஸ்கோ - கிரிமிய வளைகுடா பகுதியில் ரஷ்ய விமானப்படை மற்றும் கப்பல்படை வீரர்கள் மிகப்பெரிய அளவில் போர்பயிற்சி மேற்கொண்டனர். கிரிமிய வளைகுடா பகுதியில் ரஷ்யா தனது மிகப்பெரிய விமானப்படை தளத்தை அமைத்துள்ளது. அப்பகுதியில் பல்வேறு விமானப்படை மற்றும் கப்பற்படை ராணுவ பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கருங்கடல் பகுதியில் முகாமிட்டிருக்கும் ரஷ்ய போர்க்கப்பல்களுக்கு துணைபுரியும் வகையில், ரஷ்ய விமானப்படை விமானங்கள் மிகப்பெரிய அளவிலான போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
வான்வெளி பாதுகாப்பு மற்றும் எதிர்த்து தாக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளை ரஷ்ய விமானப்படை மேற்கொண்டது. இதில் எஸ்யூ -30 எஸ்.எம் ரக போர் விமானங்களில் பகல் மற்றும் இரவு நேர பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ரஷ்யாவின் வசமிருந்த கிரிமியா பகுதி கடந்த 2014ம் ஆண்டு உக்ரைனுடன் சேர்க்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினை வாதிகளுக்கும், உக்ரைன் அரசு படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இதனால், கிரிமிய வளைகுடா பகுதியில் தனது ராணுவ பலத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் முயற்சியாக ரஷ்யா இப்போர் பயிற்சிகளை மிகப்பெரிய அளவில் மேற்கொண்டு வருகிறது.
English Summary:
Moscow - Crimea, the Russian Air Force and Navy personnel in the Gulf, carried out large-scale war games. Crimea, Russia's largest air force base has been set up in the Gulf. Air Force and Navy military exercises in the region has taken a variety.