புதுடில்லி : பார்லி., கூட்டத்தொடரின் இன்றைய அமர்வில், ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வரும் குற்றச்சாட்டுக்களுக்கு பிரதமர் மோடி இன்று (டிசம்பர் 14 ) பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், லோக்சபா துவங்கிய 5 நிமிடத்தில் அமளி காரணமாக நன்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமர் பதிலளிக்க திட்டம் :
பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 16ம் தேதியுடன் நிறைவடைகிறது. கூட்டத்தொடர் நிறைவடைய இன்னும் 3 நாட்களே உள்ளது. இந்த கூட்டத்தொடர் துவங்கியது முதல் ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி, இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன. விவாதம் ஏதும் நடைபெறாமல் இதுவரை கூச்சல் குழப்பம் மட்டுமே நடந்து வருகிறது. இதனால் பார்லி., கூட்டத்தொடரே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இதுவரை எழுப்பி வந்த கேள்விகள், குற்றச்சாட்டுக்களுக்கு கூட்டத்தொடரின் 19 வது நாளான இன்று பிரதமர் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தின் கடைசி 3 நாட்களில் நடக்கும் விவாதங்களில் பிரதமர் மோடி நிச்சயம் பங்கேற்பார் என மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக இன்று, அவை துவங்குவதற்கு முன் முக்கிய அமைச்சர்களும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
அதே சமயம், இந்த 3 நாட்களில் அரசை எப்படி எல்லாம் எதிர்க்கலாம் என எதிர்க்கட்சிகளும் கூடி ஆலோசித்துள்ளன. பல மாநிலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் கோடி கோடியாக புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கி வருகின்றன. இது தொடர்பாக பிரச்னை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஆளும் பா.ஜ.,வும், எதிர்கட்சிகளும் தங்கள் கட்சி எம்.பி.,க்களை இந்த 3 நாட்களும் கண்டிப்பாக அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளன.
English Summary:
Barley., At today's session of the session, the opposition repeatedly raised the issue of bill charges the Prime Minister today (December 14) is expected to answer. But the onset of the Lok Sabha was adjourned till 12 noon due to disruption in 5 minutes.