துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான "சோ'' ராமசாமி இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சோ மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அது பலனின்றி காலமானார்.
82 வயதான சோ மறைந்த ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராகவும் நலம் விரும்பியாகவும் இருந்தார். ஜெயலலிதாவின் அரசியல் வியூகங்களுக்கு வழிகாட்டவும் அவற்றைச் செயல்படுத்தவும் முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 'துக்ளக்' பத்திரிகையின் ஆசிரியரான சோவின் அரசியல் அங்கதம், அவரது தனிப்பெரும் அடையாளமாகும்!
English Summary : Tughlaq editor and political commentator 'Cho' Ramaswamy Death