அங்காரா : கைது செய்யப்பட்ட துருக்கி ராணுவ வீரர்கள் இருவரை, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் உயிருடன் எரித்துக் கொன்றனர்.
உச்சகட்ட போர் :
அலெப்போ நகரில் நடைபெற்ற உச்சகட்டப் போரின்போது,, ஐ.எஸ்., பயங்கரவாதிகளிடம் பிடிபட்ட, துருக்கி நாட்டு வீரர்கள் இருவரை, பயங்கரவாதிகள் உயிருடன் எரித்துக் கொல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. துருக்கியை சேர்ந்த 16 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி தரப்போவதாக துருக்கி கூறிய நிலையில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
உயிருடன் எரிப்பு :
வீடியோவில், பாலைவனத்தில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த இரு வீரர்களின் கால்களும் சங்கிலியால் கட்டப்பட்டு, மண்டியிட்டவாறு இழுத்து வரப்பட்டு நிற்க வைக்கப்படுகின்றனர். பின் ரிமோட் மூலம் அவர்களின் பின்புறம் தீ வைக்கப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்படுகிறார்கள். 19 நிமிடம் ஓடக்கூடிய இந்த கொடூர வீடியோ தற்போது சமூக வலைத
ளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தடை :
துருக்கியில் இந்த வீடியோவால் வன்முறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால் சமூக வலைத்தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. முன்னதாக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ஜோர்டானைச் சேர்ந்த விமானி ஒருவரை, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இதே முறையில் எரித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
English summary:
Ankara : Turkey arrested two soldiers,ISISs., Terrorists, were burnt alive.