சென்னை: ‛வர்தா' புயல் இன்று(12-12-16) பிற்பகல் சென்னை அருகே கரையை கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர வட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களிலும் தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டத்தில் பள்ளிகளுக்குஇன்றுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கவிருந்த பள்ளி அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ‛வர்தா' புயல் தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன்நேற்று மாலை அளித்த பேட்டியில் கூறியதாவது:
370 கி.மீ துாரத்தில் புயல்:
வங்கக் கடலில் உருவான 'வர்தா' புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இது சென்னையில் இருந்து 370 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. அப்பகுதியில் மணிக்கு சுமார் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது.
கனமழைக்கு வாய்ப்பு:
இது, இன்று (திங்கள்) பிற்பகலில், வடக்கு தமிழகத்தின் கடலோரப் பகுதியில் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 60 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
படிப்படியாக இந்த மழையின் அளவு அதிகரித்து இன்று (திங்கள்கிழமை) காலை முதல் அடுத்த நாள் காலை வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மற்றும் அதிகனமழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை:
இதன்காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர வட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களிலும் தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. கடலுார் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary:
Chennai: "varta" storm today (12-12-16) afternoon as a precautionary measure due to cross the coast near Chennai, Chennai, Kanchipuram and Thiruvallur districts school, College announced today a holiday. Coast Guard circles performing school in Villupuram district, the holiday has been declared College.