சென்னை: மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 82. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராகவும், ஆலோசகராகவும் இருந்தவர் சோ. ஜெயலலிதா இறந்த இரண்டாவது நாளில் சோ காலமாகியுள்ளார்.
துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரும் மூத்த பத்திரிக்கையாளருமானவர் சோ.ராமசாமி. 82 வயதான இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று(07-12-16) அதிகாலை சுமார் 4 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது.
முகமது பின் துக்ளக்
1971 ஆம் ஆண்டு வெளிவந்த முகமது பின் துக்ளக் தமிழ் திரைப்படம் அனைவராலும் புகழப்பட்டது. இப்படத்தை அவரே இயக்கி, நடித்தது அனைவராலும் பேசப்பட்டது.
நாடகத்துறையில் ஜொலித்தார் சோ
முகமது பின் துக்ளக் நாடகமும் அனைவராலும் பேசப்பட்டது.
பன்முக திறமை கொண்டவர்
சிறந்த அரசியல் விமர்சகராக சோ, தான் நடத்தி வந்த துக்ளக் பத்திரிக்கையிலும் நாடகங்களிலும் அரசியல் விமர்சனம் செய்தது பெரிதும் புகழ் பெற்றதும் இதே போல் தமிழ் சினிமாவில் 200 படங்களில் சிரிப்பு நடிகராக நடித்து புகழ்பெற்றுள்ளார்.. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோருடன் நடித்துள்ளார். 4 படங்களை இயக்கியுள்ளார். தனது நடிப்பு மற்றும் இயக்கம் மூலம் பெரும் தடம் பதித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1999-2005 ல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார்.
துக்ளக் வார இதழ்
1970ல் துக்ளக் வார இதழை தொடங்கி நடத்தி வந்தார்.
சிறந்த சேவைக்கான விருதுகள்
பத்திரிக்கை துறையின் சிறந்த சேவைக்காக, 1985 இல் 'மஹாரான மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998 இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றுள்ளார்.
பொது மக்கள் அஞ்சலி
சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் சோ.ராமசாமி உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை உடல் தகனம்
மறைந்த சோ.ராமசாமியின் உடல் இன்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் 4.30 மணி அளவில் தகனம் செய்யப்படுகிறது.
English Summary : Veteran journalist Cho died. Cho.Ramacami senior journalist died at Apollo Hospital in Chennai due to illness. 82. He was a close friend of the late Chief Minister and advisor Cho was. Cho expired on the second day of the dead, Jayalalitha .