வாஷிங்டன் : விஸ்கான்சின் மற்றும் பென்சில்வேனியாவில் மறு வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
முறைகேடு புகார்:
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 8-ந்தேதி நடந்தது. அதில் டொனால்டு டிரம்ப் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார். ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அதை தொடர்ந்து தேர்தலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. விஸ்கான்சின் மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கிரீன் கட்சி வேட்பாளர் கோரிக்கை விடுத்தார்.
மறு வாக்கு எண்ணிக்கை :
அதை தொடர்ந்து விஸ்கான்சின் மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதில் டிரம்ப் ஹிலாரிகிளிண்டனைவிட 23 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றார். அதன் மூலம் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
டிரம்ப் வெற்றி:
பென்சில்வேனியாவில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மறு வாக்கு எண்ணிக்கை நடத்த முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதன் மூலம் விஸ்கான்சின், பென்சில்வேனியா மாகாணங்களில் டிரம்ப் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
English Summary:
Washington, Wisconsin and Pennsylvania, the Republican candidate in the re-vote was won by Donald Trump.