கொழும்பு: ஆசிய கோப்பை (19 வயது) தொடரில் இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில் இலங்கை அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இலங்கையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. கொழும்புவில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி, 'பேட்டிங்' தேர்வு செய்தது.
ராணா அபாரம்:
இந்திய அணிக்கு பிரித்வி ஷா, ஹிமான்சு ராணா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த போது பிரித்வி ஷா (39) அவுட்டானார். அபாரமாக ஆடிய ராணா (71) அரைசதம் கடந்தார். கேப்டன் அபிஷேக் சர்மா (29), சல்மான் கான் (26) ஓரளவு கைகொடுத்தனர். பொறுப்பாக ஆடிய சுபம் கில் (70) அரைசதமடித்தார்.
பிரியம் கார்க் (5), ஹெட் படேல் (0) ஏமாற்றினர். கடைசி நேரத்தில் காம்லேஷ் (23) கைகொடுக்க, இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்தது.
அபிஷேக் அசத்தல்:
பின் சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு விஷ்வா சதுரங்கா (13) ஏமாற்றினார். கேப்டன் அபிஷேக் சர்மா 'சுழலில்' ஹசிதா (37) சிக்கினார். அரைசதம் கடந்து ஆறுதல் தந்த கெல்லி (62), கேப்டன் கமிண்டு மெண்டிஸ் (53), அபிஷேக் பந்தில் அவுட்டாகினர். பண்டாரா (2) 'ரன்-அவுட்' ஆனார்.
ராகுல் சாகர் 'சுழலில்' கிருஷ்ணன் (14), டேனியல் (15), வீரசிங்கா (7) ஆட்டமிழந்தனர். ஜெயவிக்ரமா (6) 'ரன்-அவுட்டாக', இந்தியாவின் வெற்றி உறுதியானது.
இலங்கை அணி 48.4 ஓவரில் 239 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் கேப்டன் அபிஷேக் 4, ராகுல் சாகர் 3 விக்கெட் கைப்பற்றினர்.
மூன்றாவது முறை:
இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக (2012, 2014, 2016) ஆசிய கோப்பை வென்றது. கடந்த 2012ல் பாகிஸ்தானுடன் கோப்பையை பகிர்ந்து கொண்ட இந்தியா, 2014ல் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
English Summary:
Colombo: The Asian Cup (19 years old) of the Indian team for the third time in the series, won the title of champion. The Sri Lankan team was defeated by a margin of 34 runs in the final.