சென்னை: மறைந்த ஜெயலலிதா பிரமிப்பும் ஆச்சர்யமும் கொண்ட பெண்மணி என நடிகர் சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார்.
நேற்று இரவு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானார். கடந்த 75 நாட்களாக அவர் உடல் நலமில்லாமல் பட்ட வேதனை நேற்றோடு முடிவுக்கு வந்தது. என்றாலும், அவரது இழப்பு அதிமுகவிற்கு பேரிழப்பாக மாறியுள்ளது. தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. காலையில் இருந்து ஏராளமான தேசிய, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் என ராஜாஜி ஹாலில் குவித்திருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் அவரின் இறுதி ஊர்வலம் புறப்பட தயாராக உள்ளது.
இறுதி ஊர்வலத்திற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதால், நிற்கவும் இடமில்லாத வகையில் விஐபிக்களும், திரைத்துறையினரும் ஜெயலலிதாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவிற்கு திரைப்பட நடிகர் சூர்யா நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், "ஜெயலலிதாவின் செயல்பாடுகள் பிரமிப்பானவை, ஆச்சர்யம் ஊட்டக் கூடியவை. அவருக்கு இருந்த பல்வேறு வேலைகளுக்கு நடுவில் எனது திருமணத்திற்கு வந்திருந்தார். எங்கள் வீட்டிற்கு வந்து எங்களை ஆசிர்வாதம் செய்திருக்கிறார். அவருடைய அன்பு எங்களை விட்டு எப்போது நீங்காது. அவருடை ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்" என்று சூர்யா கூறினார்.
English summary:
Actor Surya paid his tribute to Jayalalithaa at Rajaji Hall in Chennai.