ஷாஜஹான்பூர்:அதிக அளவில் கருப்புப் பணத்தை பதுக்கியவர்கள்தான், மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை குறைகூறிவருவதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அங்குள்ள ஷாஜஹான்பூர் பகுதியில் பா.ஜ.க. சார்பில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை(நேற்று) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமித் ஷா பேசியதாவது:
எதிர்கட்சிகள் முடக்கின:
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை முன்வைத்து பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதையும் எதிர்க்கட்சிகள் முடக்கிவிட்டன. இதனால், மக்கள் நலனுக்கான மசோதாக்கள் எதையும் அரசால் நிறைவேற்ற முடியவில்லை. கருப்புப் பணத்தை அதிக அளவில் பதுக்கி வைத்திருப்பவர்கள்தான் அரசின் இந்த நடவடிக்கையை குறைகூறி வருகின்றனர் என்றார்.