சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள வார்தா புயல் நாளை அந்தமான் நிக்கோபர் தீவுகளைத் தாக்குகிறது. இப்புயல் சென்னையையும் தாக்கும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் புயலாக மாறுகிறது. இதற்கு வார்தா என பெயரிடப்பட்டுள்ளது.
இப்புயல் நாளை அந்தமான் நிக்கோபர் தீவுகளை முதலில் தாக்குகிறது. அப்போது மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். இப்புயலால் அந்தமான் தீவுகளில் 25 செமீ மழை பெய்யக் கூடும்.
அந்தமான் தீவுகள் நிலச்சரிவு உள்ளிட்ட பெரும் சேதங்களை எதிர்கொள்ள நேரிடக் கூடும். இதையடுத்து வார்தா புயல் சென்னை மற்றும் ஆந்திரா இடையே 11 மற்றும் 12-ந் தேதிகளில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 100 முதல் 130 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும்.
வார்தா புயலால், சென்னை 11,12-ந் தேதிகளில் மிக பலத்த மழையை எதிர்கொள்ளக் கூடும். புயல் பாதை இதுதான் என நிச்சயமாக தெரியாத நிலையில் தொடர்ந்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
English summary:
Cyclone Vardha is likely bring rain to Chennai and other coastal areas of Tamil Nadu.