சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் உடலை சுற்றியும் ரத்த சொந்தங்கள் யாரும் நிற்கவில்லை. சசிகலா, இளவரசி ஆகியோரின் உறவினர்கள் மட்டுமே ஜெயலலிதாவின் உடலை சுற்றி நின்று கொண்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் ஒரே ரத்த சொந்தமான அவரது அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகள் யாரையும் அருகில் கூட விடவில்லை. மருத்துவமனையில் இருந்த போது கூட யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கண்ணீர் விட்டு அழுதும் அவரை கடைசிவரை பார்க்க அனுமதிக்கவில்லை.
மரணத்திற்குப் பின்னரும், இறுதி சடங்கு நடைபெற்ற போது கூட யாரையும் வீட்டிற்கு உள்ளே விடவில்லை. இந்த நிலையில் ஜெயலலிதா உயிரிழந்து 16 மணி நேரம் நேரம் கழித்து தீபா ஜெயக்குமார் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அத்தையின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார் தீபா ஜெயக்குமார். உடனடியாக அவர் வந்த வழியே திரும்பி சென்றார்.

English summary:
Tamil Nadu: Jayalalithaa’s niece Deepa Jayakumar pays tribute to her at Rajaji Hall in Chennai.