சென்னை : 92 வயதாகும் கருணாநிதிக்கு முதுமையால் அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஒவ்வாமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார். ஓரளவு உடல்நலம் குணமாகி சில தினங்களுக்கு முன்பு அவரது புகைப்படம் ஊடகங்களில் வெளியானது.
இந்த நிலையில் இன்று காலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஊட்டச்சத்து, நீர் சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியைக் காண நண்பர்கள், பார்வையாளர்கள் யாரும் வர வேண்டாம் என்றும் தொண்டர்கள் யாரும் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என்றும் திமுக தலைமையகம் அறிவித்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார் என்றும் தகவல்கள் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary:
DMK has asked its cadres not to visit the hospital where its leader Karunanidhi has been admitted.DMK Chief and former Tamil Nadu chief minister M Karunanidhi has been admitted to a Chennai hospital.