சென்னை:
முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணி அளவில் மரணம் அடைந்தார். இதையொட்டி அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதுபற்றி அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் திரளாக குவிந்தனர்.இதனிடையே ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதா உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் ஜெயலலிதா உடல் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. அதன்பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்திற்கு காலை 5.50 மணியளவில் போயஸ் கார்டனில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது.
ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனங்களுடன் ஜெயலலிதா உடல் எடுத்துச்செல்லப்பட்டது. ஜெயலலிதா வழக்கமாக கோட்டைக்கு செல்லும் கடற்கரை சாலை வழியாகவே அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டது. காலை 6.10 மணியளவில் அவாது உடல் ராஜாஜி அரங்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் ராஜாஜி அரங்கில் குவிந்துள்ளனர். இன்னும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ராஜாஜி அரங்கில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா கலைஞர்கள் , முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் என அனைவரும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஜெயலலிதா உடல் தங்க பேழையில் வைக்கபட்டு ராணுவ வண்டியில் ஏற்றபட்டது.பின்னர் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் லட்சகணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள்,எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்கள், லட்சக்கனக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். ஜெயலலிதா இறுதி ஊர்வலம் எம்.ஜி.ஆர் நினைவிடம் வந்தடைந்தது. அங்கு இறுதிச்சடங்கு தொடங்கியது.
ஜெயலலிதா இறுதிச்சடங்கில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு, மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், வைக்கோ உள்ளிட்டோர் இறுச்சடங்கில் பங்கேற்றுள்ளனர்.
English Summary:
The late Chief Minister Jayalalitha was laid to rest along with her late leader MGR aside Bay of Bengal this evening.