சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் சரியாக 4.30 மணியளவில் ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு மெரினா கடற்கரை நோக்கி ஊர்வலமாகச் சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஊர்வலத்தின் முக்கிய துளிகள் இதோ...
• ஜெயலலிதாவின் ஊர்வலத்தை பின் தொடர்ந்தது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் கார்
• அமைச்சர் பெருமக்கள் வெள்ளை உடையில் வரிசையாக முன் வரிசையில் அணி வகுந்து சென்றனர்
• எம்பிக்கள், அதிமுக எம்பிக்கள் ஊர்வலத்தில் நடந்து சென்றனர்
• அமைச்சர்களை தொடர்ந்து போலிசார் அணி வகுப்பு
• அதன் பின் தொடர்கிறது மறைந்த ஜெயலலிதாவின் உடலைத் தாங்கிய ராணுவ வாகனம்
• பறக்கும் ரயில்வே மேம்பாலத்தில் நின்று பொதுமக்கள் அஞ்சலி
• மெரினா கடற்கரை சாலையில் உள்ள அரசு அலுவலகங்கள் மீது பொதுமக்கள் ஏறி நின்று அஞ்சலி
• முப்படை வீரர்களின் அணி வகுப்பு சூழ ஜெயலலிதாவின் இறுதிப் பயணம் சென்றது
• முக்கியமான தருணங்களில் ஜெயலலிதா கூடவே இருந்தவர் உயிர் தோழி சசிகலா ராணுவ வாகனத்தில் சோகத்தோடு அமர்ந்து பயணம் • ஜெயலலிதா ஆட்சியில் இருந்து நெருக்கடியின் காரணமாக பதவி விலகும் போதெல்லாம் முதல்வர் பதவி ஏற்று ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ஓ. பன்னீர் செல்வம் ராணுவ வாகனத்தில் பயணம்
• உத்தரபிரதேச மாநிலத் தலைவர் அகிலேஷ் யாதவ் ராணுவ வாகனத்தில் அமர்ந்து பயணம்
• கண்ணீர் மல்க லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
• சாலையின் இருமருங்கிலும் பொதுமக்கள் கதறி கண்ணீர் விட்டு அஞ்சலி
• வழி எங்கும் மலர் தூவி பொதுமக்கள் அஞ்சலி
• சேப்பாக்கம் சிதம்பரம் விளையாட்டு மைதானத்தின் மேல் நின்று பொதுமக்கள் அஞ்சலி
• அதிமுக கொடி ஏந்தி தொண்டர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர் • ராஜாஜி ஹால் முதல் மெரினா வரை மக்கள் கூட்டம் வரிசையாய் நின்று அஞ்சலி • இரண்டு விரல்களை உயர்த்தி ஜெயலலிதா காட்டுவது போல் அதிமுக தொண்டர் இரு விரல்களை காட்டி ஊர்வலத்தில் நடந்து சென்றனர்
• ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கை பொதுமக்கள் பார்க்க வசதியாக மெரினா கடற்கரையில் எல்சிடி திரைகள் பொருத்தப்பட்டன.
• ஒரு சிறிய அசம்பாவிதமும் இன்றி ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் முடிந்தது
• வழி நெடுகிலும் குவிந்திருந்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் போட்டோ, வீடியோ எடுத்து வரலாற்று நினைவுகளை பத்திரப்படுத்திக் கொண்டார்கள்.
• மக்கள் கூட்டத்தில் ஊர்ந்து சென்று இறுதிப் பயணத்தை முடித்தார் ஜெயலலிதா
• முப்படை வீரர்கள் ஜெயலலிதா தூங்கும் கண்ணாடிப் பேழை இறக்கி சுமந்து சென்றனர்

English summary:
Last minutes of Jayalalitha’s funeral procession