சென்னை: தமிழகத்தில் உருவான அரசியல் புயல்களுக்கும் திருப்பங்களுக்கும் காரணமாக இருந்ததாலேயே 'ராஜகுரு'வாக சுட்டிக்காட்டப்பட்டவர் மறைந்த பத்திரிகையாளர்.
முதுபெரும் பத்திரிகையாளராக, நடிகராக மட்டுமே திகழாமல் தமிழகத்தின் பரபரப்பான அரசியல் நிகழ்வுகளுக்கும் மையப்புள்ளியாக திகழ்ந்தவர் சோ ராமசாமி.
இயல்பிலேயே திமுக, அதிமுகவுக்கு எதிர்ப்பாளராக இருந்தவர் சோ. தம்முடைய பத்திரிகைகளில், தாம் ஏற்ற சினிமா பாத்திரங்களில் இரண்டு 'கழகங்களையும்' காலி செய்யும் அளவுக்கு வசனங்களால் கல்லெறிந்தவர் சோ.
ஜெ. அரசியல் ஆலோசகர்:
ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் அரசியலுக்கு அப்பால் நெருங்கிய நண்பராகவும் ஒரு அரசியல் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். சில நேரங்களில் ஜெயலலிதா மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு செக் வைக்கும் வகையில் அவருக்கு எதிராகவும் வியூகங்களையும் வகுத்து வெற்றி பெறவும் வைத்தவர் சோ.
ரஜினி மூலமாக..
. பொதுவாக திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தி எனும் வாய்ப்பை காலந்தோறும் தேடிக் கொண்டே இருந்தார் சோ. இதற்கு முதல் துருப்புசீட்டாக கிடைத்தவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினியை எப்படியாவது அரசியலில் கொண்டுவந்துவிட வேண்டும் என தீவிர முயற்சிகளை அவர் மேற்கொண்டு வந்தார்.
1996 அரசியல் புயல்...
ஆனால் ரஜினியோ சோவின் இழுப்புக்கு இறங்கவே இல்லை. இந்த நிலையில்தான் 1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வருகிறது. 1991-96 ஆட்சியில் இருந்த ஜெயலலிதா மீது மாபெரும் அதிருப்தி புயலே தமிழகத்தில் வீசிக் கொண்டிருக்கிறது....அந்த நேரத்தில் அதிமுகவுடனேயே கூட்டு என முடிவெடுக்கிறது காங்கிரஸ் மேலிடம்.
ரஜினி- தமாகா- திமுக கூட்டணி:
இந்த சூழலை தம்முடைய எண்ணங்களுக்கு சாதகமாக்குகிறார் சோ... ரஜினிகாந்த் மூலமான நகர்வுகளால் காங்கிரஸ் கட்சி உடைகிறது... மூப்பனார் தலைமையில் தமாகா உதயமாகிறது. திமுகவுடன் தமாகா கூட்டணி அமைக்கிறது. திமுக- தமாகா கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்கிறார்.. தமிழகத்தில் அதிமுக படுதோல்வியைத் தழுவுகிறது.
நேரடி அரசியலுக்கு வரவே இல்லை...
இப்படி வாய்ஸ் கொடுத்து வந்த ரஜினிகாந்த் இனி நேரடி அரசியலுக்கு வந்துவிடுவார் என நம்பினார் சோ. ஆனால் ரஜினிகாந்த், சோவின் கடைசிமூச்சு உள்ள வரை நேரடி அரசியல் பக்கமே வரவில்லை.
விஜயகாந்த் :
இதனால் திமுக- அதிமுகவுக்கு மாற்று சக்திக்கான சோவின் காத்திருப்பு தொடங்கியது... அப்போதுதான் விஜயகாந்த் அரசியல் பிரவேசமெடுக்கிறார்..
விஜயகாந்தை முன்வைத்து அடுத்த காய்களை நகர்த்த தொடங்கினார்... ஆனால் தொடக்கத்தில் தனித்தே போட்டி என விஜயகாந்த் அடம்பிடித்து வந்தார்...பின்னர் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது தேமுதிக. இந்த கூட்டணிக்கு மூளையாக இருந்தவர் சோ எனவும் கூறப்பட்டது.
மோடி அலையில்...
கடந்த லோக்சபா தேர்தலின் போது நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி களமிறங்கியது பாஜக. நாடு முழுவதும் மோடி அலை வீசியது. அப்போது தேமுதிகவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்க காய்களை நகர்த்தியவரும் சோ தான்.
ஜிகே வாசன்:
அதேபோல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்குவதா? வேண்டாமா? என தீவிர ஆலோசனையில் இருந்தார் வாசன். அப்போது வாசன் அடிக்கடி சென்று சந்தித்த பிரபலம் 'சோ'தான்.
எங்களின் ராஜகுரு..:
பாஜகவைப் பொறுத்தவரை அக்கட்சி பகிரங்கமாகவே பிரகடனப்படுத்தியது 'சோ' எங்களின் ராஜகுரு என்று... பாஜகவின் மூத்த தலைவர் இல. கணேசன் இப்படித்தான் சொன்னார்..."சோ எங்களுடைய ஆதரவாளர். பாரதிய ஜனதா கட்சி நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணமுடையவர். மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் எல்லாம் ராஜகுரு என்று ஒருவர் இருப்பார். அப்படிப்பட்டவர் சோ. எந்தவிதமான அதிகாரமும் இல்லாத, மன்னரைத் தட்டிக் கேட்கும் அதிகாரம் உடையவர். ராஜகுரு தண்டிப்பது என்பது, மன்னன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக..
ஆம்...தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் மூப்பனார், ஜெயலலிதா, விஜயகாந்த், வாசன் மற்றும் பாஜகவுக்கு ராஜகுருவாகவே திகழ்ந்தவர் மறைந்த சோ....

English summary:
Cho Ramaswamy was a political advisor to TN Politicians like GK Moopanar, Jayalalithaa, Vijayakanth and GK Vasan.