மெரினா கடற்கரையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வரும் இளைஞர்களுக்கு, பி.எஸ்.என்.எல்., கைகொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த, 16ம் தேதியில் இருந்து சென்னை, மெரினா கடற்கரையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வருகின்றனர். சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்று கூடிய அவர்களால், அதை, போராட்டக் களத்தில் பயன்படுத்த முடியவில்லை. காரணம்,போலீசார், ஜாமர் கருவி பொருத்தியதே.ஆனால், சிலருக்கு மட்டும், மொபைல் இன்டர்நெட் இணைப்பு தொடர்ந்து கிடைத்ததால், அவர்கள் மூலம் வெளியுலகிற்கு தடையின்றி, தகவல் அனுப்ப முடிந்தது. அதற்கு, பி.எஸ்.என்.எல்., இணைப்பு பெரிதும் உபயோகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் நேற்று கூறியதாவது: மெரினா கடற்கரை பகுதியில், கடந்த மூன்று நாட்களாக, எங்கள், மொபைல் போன் டவர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இணைய பயன்பாடு, 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது.
வழக்கமாக, அண்ணா சதுக்கம் முதல் ராணி மேரி கல்லுாரி வரை உள்ள டவர்களில், தினசரி, 15 எம்.பி.பி.எஸ்., (மெகா பைட் பெர் செகண்ட்) பயன்பாடு மட்டும் இருக்கும். ஆனால், 16ம் தேதி, 22 எம்.பி.பி.எஸ்., ஆக அது உயர்ந்தது. மறுநாள், அது, 29 எம்.பி.பி.எஸ்., ஆகவும், 18ம் தேதி, 39 எம்.பி.பி.எஸ்., அதாவது, 2 மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்தது; தொடர்ந்து அதிகரித்த படி உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
English Summary:
Marina beach, for young people who are struggling to support Jallikattu, BSNL., Was found join together At last, on 16, from Madras, Marina beach, thousands of students and young people, are struggling to support Jallikattu. They gathered through social networking sites, it could not be used in battle.