புதுடில்லி: நாடு முழுவதும், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில், 4,807 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கண்டறியப்பட்டுள்ளது; 112 கோடி ரூபாய் மதிப்பிலான, புதிய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதிரடிசோதனை:
மத்திய அரசு, செல்லாத நோட்டு திட்டத்தை, நவ., 8ல் அறிவித்தது. பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டது. செல்லாத நோட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது முதல், நாடு முழுவதும், வருமான வரி அதிகாரிகள், 1,138 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
நோட்டீஸ்:
இந்த சோதனைகளில், 4,807 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கண்டறியப்பட்டுள்ளது; 112 கோடி ரூபாய் மதிப்பிலான, புதிய நோட்டுகளும், 97.8 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக, 5,184 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்றவை விசாரிக்கும்படி, 526 வழக்குகளை, வருமான வரித்துறை பரிந்துரைத்துள்ளது.
English summary:
NEW DELHI : Nationwide, in tests conducted by the income tax authorities, found 4,807 crore black money; Worth Rs 112 crore, the new banknotes were seized.