மும்பை: இங்கிலாந்து 'லெவன்' அணிக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் இந்திய 'ஏ' அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ராயுடு, கேப்டன் தோனியின் விளாசல் வீணானது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, மூன்று ஒருநாள், மூன்று 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி புனேயில் வரும் 15ல் நடக்கவுள்ளது. இத்தொடருக்கு முன், இங்கிலாந்து அணி, இந்தியா 'ஏ' அணியுடன் இரண்டு ஒருநாள் பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது. முதல் பயிற்சி போட்டி மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து லெவன் அணி கேப்டன் இயான் மார்கன் 'பவுலிங்' தேர்வு செய்தார். இது, இந்திய அணியை தோனி வழிநடத்தும் கடைசி போட்டியாக அமைந்தது.
ராயுடு சதம்:
இந்திய ஏ அணிக்கு ஷிகர் தவான், மன்தீப் சிங் ஜோடி துவக்கம் தந்தது. மன்தீப் சிங் (8) ஏமாற்றினார். பின் இணைந்த தவான், ராயுடு ஜோடி சிறப்பாக செயல்பட்டது. அரை சதம் கடந்த தவான் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக செயல்பட்ட ராயுடு சதம் விளாசினார். இவர் (100) 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினார்.
தோனி விளாசல்:
தன் பங்கிற்கு யுவராஜ் (56) அரை சதம் கடந்தார். சாம்சன் டக்-அவுட்டானார். எதிரணி பந்துவீச்சை கேப்டன் தோனி வெளுத்து வாங்கினார். வோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி அடித்த இவர் அரை சதம் விளாசினார். முடிவில், இந்திய 'ஏ' அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்தது. தோனி (68), ஹர்திக் பாண்ட்யா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஜேசன் அரை சதம்:
கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து 'லெவன்' அணிக்கு ஜேசன் ராய், ஹேல்ஸ் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. குல்தீப் பந்தில் ஹேல்ஸ் (40) சிக்கினார். ஜேசன் ராய் (62) அரை சதம் கடந்தார். கேப்டன் மார்கன் (3) ஏமாற்றினார். பட்லர் 46 ரன்கள் விளாசினார். மொயீன் அலி டக்-அவுட்டானார்.
பில்லிங்ஸ் அசத்தல்:
பின் இணைந்த பில்லிங்ஸ், டாவ்சன் ஜோடி சிறப்பாக விளையாடியது. பவுண்டரிகளாக அடித்த பில்லிங்ஸ் அரை சதம் கடக்க, வெற்றி உறுதியானது. டாவ்சன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். பாண்ட்யா பந்தில் பில்லிங்ஸ் (93) ஆட்டமிழந்தார். இருப்பினும், வோக்ஸ் இரண்டு பவுண்டரி அடிக்க, இங்கிலாந்து 'லெவன்' அணி 48.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 307 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வோக்ஸ் (11), ரஷித் (6) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
English summary:
Mumbai: England 'Eleven' first practice match against India 'A' team in the fall of 3 wickets. Rayudu, Dhoni's thrashing in vain.