சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் சிந்தனை போராட்டம் அமைதியாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் என்பதை நிரூபித்துள்ளனர். அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம் சென்னை மெரினா, கோவை வ.உ.சி மைதானம், மதுரை தமுக்கம் மைதானம், சேலம், நெல்லை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் கூட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த இளைஞர்கள் போராட்டம் உலகத்தையே திரும்பிபார்க்க வைத்துள்ளது.
இந்நிலையில், இங்கு சேரும் காலி வாட்டர் பாட்டில்கள், பாக்கெட்டுகள், உணவுக் கழிவுகள், சாப்பிட்ட பிளாஸ்டிக் தட்டுகள் உள்பட இதர குப்பை கழிவுகளை மாணவ, மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். அதேபோல் குடிக்க வழங்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை ஒன்று சேர்த்து அதை காளை வடிவில் வடிவமைத்து மாணவர்கள் கலையுணர்வையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
English summary:
Tamil Nadu Jallikattu in support of the youth and students are engaged in the fight for the 6th day there will be empty water bottles, packets, food waste, garbage and other wastes, including plastic plates and eating, the students are removed together. One of the bottles of water and drink it along with the students to design and aesthetic expressed in the form of a bull.