சென்னை: மெரினா, கோவையில் நடைபெறும் போராட்டத்தை திசை திருப்ப சில அமைப்புகள் முயற்சி செய்வதாக ஹிப் ஹாப் ஆதி கூறியுள்ளார். போராட்டத்தை கலைக்க சில தீய விஷமிகள் முயற்சி செய்து வருகின்றனர். தேச விரோத செயல்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன் என பேஸ்புக்கில் ஹிப் ஹாப் ஆதி பேசியுள்ளார். தேச தலைவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டுவது நல்ல நோக்கமாகாது என்று ஹிப் ஹாப் ஆதி கூறியுள்ளார்.
தனித் தமிழ்நாடு, மோடி எதிர்ப்பு என போராட்டத்தை திசை திருப்ப சில அமைப்புகள் முயற்சி செய்கின்றன. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று நமது நாட்டு மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றும் கூறினார். மேலும் ஜல்லிக்கட்டு பிரச்சனையில் நானும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டுள்ளேன் எனவும் அவர் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு நல்ல தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என ஹிப் ஹாப் ஆதி கருத்து தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு நான் எப்போதும் குரல் கொடுப்பேன். மேலும் என் மீது வேறு சாயங்களை பூசவேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
English summary:
Chennai: Marina, some of the settings in the expression of the conflict to try to distract the hip-hop Adi said. Some evil mongers are trying to disperse the protest. On Facebook that he would never get involved in anti-national activities ADI has hip-hop. If national leaders obscene words cursing the beginning of hip hop that has good cost.