சென்னை: 'தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வங்கக் கடலில், அந்தமான் அருகே உருவான, காற்றழுத்த தாழ்வு நிலை, மத்திய வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. இது, மேற்கு நோக்கி மேலும் நகர்ந்து வருகிறது. வங்கக் கடலில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும் இரு நாட்களுக்கு மழை பெய்யும்.
தென் மாவட்டங்களில் பரவலாகவும், வட கடலோர மாவட்டங்களில், ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும். சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை, குறைந்தபட்சம், 25 டிகிரி; அதிகபட்சம், 30 டிகிரி செல்சியசாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
English summary:
Chennai: "in Tamil Nadu today, tomorrow it will rain", as meteorological reports.